​​ 5 அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
5 அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி

Published : Sep 07, 2018 8:57 PM

5 அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி

Sep 07, 2018 8:57 PM

தமிழ்நாட்டில், ஐந்து அரசு மருத்துவக்கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, மருத்துவக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துக்கல்லூரிகளில், கடந்த 5 மாதங்களாகவே முதல்வர் பதவி காலியாக உள்ளதால், அருகாமை மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர்களே, பொறுப்பு முதல்வராக பதவி வகித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, காலியாக உள்ள 5 முதல்வர் பணியிடங்களுக்கு 17 பேரை சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்து, மருத்துவ கல்வி இயக்குநரகம், தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.