​​ திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது - தம்பிதுரை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது - தம்பிதுரை

Published : Sep 07, 2018 8:17 PM

திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது - தம்பிதுரை

Sep 07, 2018 8:17 PM

திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் டிஜிபி மீதும் களங்கம் ஏற்படுத்தவே சிபிஐ சோதனை நடைபெற்றுள்ளதாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காணப்பாடி பகுதி மக்களை சந்தித்து தம்பிதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, அழகிரியின் அமைதி ஊர்வலத்தை சிறுமைப்படுத்தவே திமுகவும் பாஜகவும் சேர்ந்து அதே தேதியில் சிபிஐ சோதனையை அரங்கேற்றி உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.