கேரளாவில் இருந்து மாலத்தீவுகள் சென்ற ஏர் இந்தியா விமானம் தவறான ஓடுபாதையில் தரையிறக்கம்
Published : Sep 07, 2018 8:01 PM
கேரளாவில் இருந்து மாலத்தீவுகள் சென்ற ஏர் இந்தியா விமானம் தவறான ஓடுபாதையில் தரையிறக்கம்
Sep 07, 2018 8:01 PM
கேரளாவில் இருந்து மாலத்தீவுகள் சென்ற ஏர் இந்தியா விமானம் தவறான ஓடுபாதையில் தரையிறக்கப்பட்டதில் 136 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவனந்தபுரத்தில் இருந்து மாலே நகருக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் அங்குள்ள வெலனா ((Velana)) சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமான ஓடுபாதைக்குப் பதில் கட்டுமான நிலையில் இருந்த மற்றொரு ஓடுபாதையில் தரையிறக்கப்பட்டது. இதில் 136 பயணிகளும் விமானக் குழுவினரும் உயிர்தப்பியதாகவும் விமானத்தின் இரண்டு சக்கரங்கள் சேதம் அடைந்ததாகவும் ஏர் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் விமானம் முறையான நிறுத்துமிடத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும், விமானம் தவறான ஓடுபாதையில் இறங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.