​​ அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இந்தியரின் உடலை கொண்டுவர நடவடிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இந்தியரின் உடலை கொண்டுவர நடவடிக்கை

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இந்தியரின் உடலை கொண்டுவர நடவடிக்கை

Sep 07, 2018 7:11 PM

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இந்தியரின் உடலை ஆந்திராவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்நாட்டு நேரப்படி புதனன்று காலை ஒன்பது மணியளவில் சின்சினாட்டி நகர வங்கி ஒன்றில் நுழைந்த ஒருவன், அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டான். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த  நிதி ஆலோசகரான பிரித்விராஜூம் ஒருவர் ஆவார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கொலையாளியைச் சுட்டுக் கொன்ற நிலையில் பிரித்விராஜின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.