​​ அடுத்த ஆண்டு முதல் விலை இல்லா செருப்புகளுக்கு பதில் காலணிகள்(ஷூ) வழங்கப்படும் - செங்கோட்டையன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடுத்த ஆண்டு முதல் விலை இல்லா செருப்புகளுக்கு பதில் காலணிகள்(ஷூ) வழங்கப்படும் - செங்கோட்டையன்

அடுத்த ஆண்டு முதல் விலை இல்லா செருப்புகளுக்கு பதில் காலணிகள்(ஷூ) வழங்கப்படும் - செங்கோட்டையன்

Sep 07, 2018 7:05 PM

அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு அடுத்த ஆண்டு முதல் விலை இல்லா செருப்புகளுக்கு பதில் காலணிகள்(ஷூ) வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழக அரசு சார்பில்  திருநெல்வேலி மாவட்டத்தில் பாவூர்ச்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீட் மற்றும் ஜே இ இ பயிற்சி மையத்தைத்  தொடங்கி வைத்து பேசிய அவர் இதனை கூறினார்.

அடுத்த ஆண்டு 12ஆம் வகுப்பில் திறன் மேம்பாடு பற்றிய பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என்றும், 12ஆம் வகுப்புப் படிக்கும் 25ஆயிரம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பட்டயக் கணக்காளர் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர்  தெரிவித்தார்.

விழாவில் 135பயனாளிகளுக்குத் தொண்ணூறு இலட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.