​​ 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், முக்கியக் குற்றவாளிக்கு மரண தண்டனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
11 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், முக்கியக் குற்றவாளிக்கு மரண தண்டனை

11 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், முக்கியக் குற்றவாளிக்கு மரண தண்டனை

Sep 07, 2018 5:48 PM

அசாமில் 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், முக்கியக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 23-ம் தேதி, 11 வயது சிறுமி சில கொடூரர்களால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர சம்பவத்தில் குற்றவாளிகளைத் தேடிவந்த காவல்துறையினர் 6 பேரைக் கைது செய்தனர்.

வழக்கு குறித்து விசாரித்து வந்த நீதிமன்றம், 5 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர்களை கடந்த செவ்வாய் அன்று விடுவித்தது. முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நபருக்கு மட்டும் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.