​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Published : Sep 07, 2018 5:19 PM

ஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Sep 07, 2018 5:19 PM

ஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

அந்நாட்டில் கடந்த 4-ஆம் தேதி ஜெபி புயல் தாக்கியது. இதில் ஏராளமான மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கியது. இவற்றிலிருந்து மக்கள் மீளாத நிலையில், ஹொக்கைடோ தீவில் ((Hokkaido)) நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல்வேறு இடங்களில் லட்சக் கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததோடு, நிலச்சரிவுகளும் ஏற்பட்டது.

இந்த பாதிப்புகளில் 8 பேர் பலியானதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 16 ஆக அதிகரித்திருப்பதாக ஜப்பான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 26 பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.