​​ குஜராத்தில் 13-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பட்டேலின் உடல்நிலை மோசமானதால் மருத்துவனையில் அனுமதி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குஜராத்தில் 13-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பட்டேலின் உடல்நிலை மோசமானதால் மருத்துவனையில் அனுமதி

குஜராத்தில் 13-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பட்டேலின் உடல்நிலை மோசமானதால் மருத்துவனையில் அனுமதி

Sep 07, 2018 5:02 PM

குஜராத்தில் 13-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பட்டேலின் உடல்நிலை மோசமானதால் அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கிய ஹர்திக் பட்டேலின் உண்ணாவிரதம் இன்று 13-வது நாளை எட்டியது. உடல் மெலிந்த ஹர்திக் தமது சொத்துக்களைப் பிரித்து உயில் எழுதிவைத்துவிட்டார். அரசுதரப்பில் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், ஹர்திக் தண்ணீர் அருந்துவதையும் நிறுத்திவிடுவார் என படேல் சமூக தலைவர்கள் நேற்று அறிவித்தனர். இந்நிலையில், ஹர்திக் படேலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, ஏற்கெனவே தயாராக வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.