​​ இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால் வெளிநாட்டுக் கடனுக்காக இந்தியா கூடுதலாக ரூ.70,000கோடி செலுத்த வேண்டும்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால் வெளிநாட்டுக் கடனுக்காக இந்தியா கூடுதலாக ரூ.70,000கோடி செலுத்த வேண்டும்

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால் வெளிநாட்டுக் கடனுக்காக இந்தியா கூடுதலாக ரூ.70,000கோடி செலுத்த வேண்டும்

Sep 07, 2018 4:34 PM

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால் வெளிநாட்டுக் கடன்களுக்காகக் கூடுதலாக எழுபதாயிரம் கோடி ரூபாய் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.

ஒருபுறம் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே போகிறது. மறுபுறம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் நாளுக்குநாள் வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது. இன்று ஒரு டாலருக்கு 72ரூபாய் என்கிற அளவையும் தொட்டுவிட்டது. இந்த ஆண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு 11விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் எண்ணெய் இறக்குமதிக்காகப் பெற்ற வெளிநாட்டுக் கடனுக்காகச் சுமார் எழுபதாயிரம் கோடி ரூபாயை இந்தியா கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும் எனப் பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.