​​ 12ஆம் வகுப்பில் சிறப்பாக படிக்கும் வணிகவியல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி - செங்கோட்டையன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
12ஆம் வகுப்பில் சிறப்பாக படிக்கும் வணிகவியல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி - செங்கோட்டையன்

12ஆம் வகுப்பில் சிறப்பாக படிக்கும் வணிகவியல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி - செங்கோட்டையன்

Sep 07, 2018 3:43 PM

12ஆம் வகுப்பில் வணிகவியல் துறையில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி துவக்க விழாவில் கலந்துகொண்ட பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 500 சிறந்த ஆடிட்டர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அட்டன்டிங் லேப் என்ற திட்டம், வருகிற கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள 600 பள்ளிகளில் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.