​​ புத்தகம் சுமக்க வேண்டிய மாணவர்கள் சிலர் ஆயுதம் சுமப்பது வருத்தமளிக்கிறது- முதலமைச்சர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புத்தகம் சுமக்க வேண்டிய மாணவர்கள் சிலர் ஆயுதம் சுமப்பது வருத்தமளிக்கிறது- முதலமைச்சர்

புத்தகம் சுமக்க வேண்டிய மாணவர்கள் சிலர் ஆயுதம் சுமப்பது வருத்தமளிக்கிறது- முதலமைச்சர்

Sep 07, 2018 3:32 PM

புத்தகங்களை சுமக்க வேண்டிய மாணவர்கள் சிலர் ஆயுதங்களை சுமப்பது வருத்தமளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை பல்கலைக்கழக வைர விழா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அலுவலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகளை வழங்கினார்.

விழாவில் உரையாற்றிய அவர், தமிழக அரசு கல்விக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்து வருவதாகவும், மாணவர் நலன்களுக்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய சராசரியைவிட அதிகம் என்றும், மாணவர் சேர்க்கை விகிதத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் கூறினார்.

மாணவர்கள் வன்முறைகளைத் தவிர்த்து சமுதாய பொறுப்போடு நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.