​​ அமெரிக்காவில் வங்கியில் துப்பாக்கிச்சூடு - ஆந்திராவைச் சேர்ந்த இளம் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் வங்கியில் துப்பாக்கிச்சூடு - ஆந்திராவைச் சேர்ந்த இளம் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி

அமெரிக்காவில் வங்கியில் துப்பாக்கிச்சூடு - ஆந்திராவைச் சேர்ந்த இளம் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி

Sep 07, 2018 2:18 PM

அமெரிக்காவில் வங்கி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்.

சின்சினாட்டி நகரில் ஃபௌன்டேன் ஸ்கொயர் கட்டிடத்தில் ஃபிப்த் தேர்ட் வங்கி ((Fifth Third Bank)) இயங்குகிறது. இந்த வங்கியில் வியாழனன்று திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவன் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினான்.

இதில் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பிரிதிவிராஜ் கண்டேபி ((Prithviraj Kandepi)) என்ற அதிகாரி உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். தகவலறிந்து வங்கியை சுற்றி வளைத்த போலீசார், மர்ம நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த நபரும் கொல்லப்பட்டான்.