​​ கிகி சேலஞ்சை அடுத்து, சென்னையில், மழை நீர் சேகரிப்புக்கான சவால்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிகி சேலஞ்சை அடுத்து, சென்னையில், மழை நீர் சேகரிப்புக்கான சவால்

கிகி சேலஞ்சை அடுத்து, சென்னையில், மழை நீர் சேகரிப்புக்கான சவால்

Sep 07, 2018 1:53 PM

கிகி சேலஞ்சை அடுத்து, சென்னையில், மழை நீர் சேகரிப்புக்கான சவாலை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

மழைக்காலம் வரும் நிலையில், மெட்ரோ வாட்டரின் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு சவால் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொட்டை மாடியை சுத்தம் செய்தல், அதன் நீர் வழித்தடக் குழாயைச் சுத்தம் செய்தல், மழை நீர் சேகரிப்பு இடத்தில் குப்பைகளை அகற்றுதல், அதில் நீரை ஊற்றுதல் ஆகிய வழிமுறைகளை மேற்கொள்ள குடியிருப்பு வாசிகளுக்கு சவால் விடுத்துள்ளது.

அவற்றை படம்பிடித்து மெட்ரோ வாட்டரின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் நபர்களுக்கு பரிசு தருவதாக அறிவித்துள்ளது. மழைக்காலம் வருவதால், நீரை சேமித்தல், வெள்ள பாதிப்பைக் குறைத்தல் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் ஆகிய நோக்கோடு இந்த சவால் விடுக்கப்பட்டுள்ளது. 

  1. prabhuanandhan

    அருமை....

    Reply