​​ விராட்கோலி, ஜோ ரூட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் : பிரையன் லாரா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விராட்கோலி, ஜோ ரூட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் : பிரையன் லாரா

விராட்கோலி, ஜோ ரூட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் : பிரையன் லாரா

Sep 07, 2018 1:48 PM

விராட் கோலியும் ஜோ ரூட்டும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - இந்திய அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றுக்கு ஒன்று என்கிற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேசிய பிரையன் லாரா, இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகிய இருவரும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் எனத் தெரிவித்தார்.

அதேபோல் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், தென்னாப்பிரிக்காவின் காகிசோ ரபடா ஆகியோர் தனக்குப் பிடித்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்றும் லாரா குறிப்பிட்டார்.