​​ ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு மருத்துவர்கள் ஒத்துழைப்பதாக அப்போலா வழக்கறிஞர் விளக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு மருத்துவர்கள் ஒத்துழைப்பதாக அப்போலா வழக்கறிஞர் விளக்கம்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு மருத்துவர்கள் ஒத்துழைப்பதாக அப்போலா வழக்கறிஞர் விளக்கம்

Sep 07, 2018 1:48 PM

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு  மருத்துவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு அப்போலோ மருத்துவர்கள் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் நேற்று குற்றஞ்சாட்டியிருந்தது.  இது குறித்து அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் மஹிபுனா பாஷா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த 37பேரை விசாரித்துள்ளதாகத் தெரிவித்தார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், அனைத்து ஆதாரங்களையும் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் சில மருத்துவர்கள் பல நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க இருந்ததால்தான் ஆஜராக இயலவில்லை என்றும் மஹிபுனா பாஷா தெரிவித்தார்.விசாரணைக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆசிரியர் ஆனந்தன் ஆணையம் எழுப்பிய வினாக்களுக்கு உரிய பதிலை அளித்ததாகத் தெரிவித்தார்.