​​ பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான்கான் மீது காலணி வீச்சு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான்கான் மீது காலணி வீச்சு


பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான்கான் மீது காலணி வீச்சு

Mar 14, 2018 6:42 AM

பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் மீது காலணி வீசப்பட்டது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜராத் என்ற இடத்தில் நேற்று பேரணி ஒன்றைத் தொடங்கி வைத்து, இம்ரான்கான் பேச முயன்றார். அப்போது அவரை நோக்கி மர்ம நபர் ஒருவர் காலணியை வீசினார்.

ஆனால் அந்த காலணி, அருகில் இருந்த மற்றொரு தலைவரான அலீம்கான் மீது பட்டது. இதையடுத்து காலணி வீசியவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். கடந்த இரு தினங்களுக்கு முன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதும் காலணி வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.