​​ ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி ஆஜர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி ஆஜர்

Published : Sep 07, 2018 12:52 PM

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி ஆஜர்

Sep 07, 2018 12:52 PM

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். 

அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி விசாரணை ஆணையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் இன்று சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

அவரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மருத்துவமனையில் செய்யப்பட்டிருந்த வசதிகள் ஆகியவை குறித்தும், அப்போலோ மருத்துவர்கள் உரிய நாளில் ஆஜராகாதது குறித்தும் விளக்கம் கேட்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதேபோல் நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆசிரியர் ஆனந்தனும் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.