​​ கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான கோவை இளைஞர், பரிதாபமாக உயிரிழந்தார்.
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான கோவை இளைஞர், பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான கோவை இளைஞர், பரிதாபமாக உயிரிழந்தார்.

Sep 07, 2018 12:49 PM

கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் பாதிப்பு அறிகுறியோடு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளைஞர் ஒருவர், பரிதாபமாக உயிரிழந்தார். 

அண்மையில் கேரளாவில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக விலங்குகளின் மூலம் மனிதர்களுக்குப் பரவும் லெப்டோஸ்பிரோசிஸ் (leptospirosis) எனும் எலிக்காய்ச்சல் காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கையில் ஈடபட்டு வருகிறது.கோவை அரசு மருத்துவமனையில் எலி காய்ச்சல் பாதிப்பு அறிகுறியோடு நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட கோவை கிணத்துக்கடவு அடுத்த கொண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற 29 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் வந்தால் தாமதிக்காமல் அரசு மருத்துவமனையை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கோவை அரசு மருத்துவமனையில் வால்பாறையைச் சேர்ந்த 65 வயதான ஒருவரும் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். மேலும் கோவை அவிநாசியில் உள்ள இருவேறு தனியார் மருத்துவமனைகளில் நீலகிரியைச் சேர்ந்த 2 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறியோடு சிகிச்சை பெறுகின்றனர்.