​​ கடற்பகுதிகளில் முட்டையிடும் ஆமை முட்டைகளை எடுத்து விற்பனை செய்யும் கும்பல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடற்பகுதிகளில் முட்டையிடும் ஆமை முட்டைகளை எடுத்து விற்பனை செய்யும் கும்பல்

Published : Sep 07, 2018 12:29 PM

கடற்பகுதிகளில் முட்டையிடும் ஆமை முட்டைகளை எடுத்து விற்பனை செய்யும் கும்பல்

Sep 07, 2018 12:29 PM

கன்னியாகுமரி கடற்பகுதிகளில் முட்டையிடும் அரியவகை ஆமைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் மணக்குடி ஆகிய கடற்கரை கிராமங்களுக்கிடையே 6 கிராமங்களை உள்ளடக்கிய முகிலன்குடியிருப்பு கடற்கரை உள்ளது. இந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுவதால் இந்த பகுதியில் ஆமைகள் வந்து பாதுகாப்பாக முட்டையிட்டு செல்கின்றன. குறிப்பாக அழிந்து வரும் இனமான ஆலிவ் ரெட்லி ஆமைகள் இங்கு அதிக அளவில் முட்டையிடுகின்றன.

இந்நிலையில் முட்டைகளை இட வரும் ஆமைகளின், கால் தடங்களை பின்பற்றி சமூக விரோதிகள் சிலர், முட்டைகளை எடுத்து விற்பனை செய்து வருவதாகக் கூறும் இயற்கை ஆர்வலர்கள், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.