​​ ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க செய்தது மகிழ்ச்சி - டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க செய்தது மகிழ்ச்சி - டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க செய்தது மகிழ்ச்சி - டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ்

Sep 07, 2018 11:40 AM

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்குபெற்று இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க செய்தது மகிழ்ச்சியளிப்பதாக டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற 18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த அமல்ராஜ் வெண்கல பதக்கம் வென்றார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏற்கெனவே அர்ஜுனா விருதும், காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளில் 3 முறை தங்கப்பதக்கமும் வென்றவர் அமல்ராஜ். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமக்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.