​​ பேராசிரியை நிர்மலா தேவி மீது 2வது குற்றப்பத்திரிகை தாக்கல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேராசிரியை நிர்மலா தேவி மீது 2வது குற்றப்பத்திரிகை தாக்கல்

பேராசிரியை நிர்மலா தேவி மீது 2வது குற்றப்பத்திரிகை தாக்கல்

Sep 07, 2018 11:32 AM

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி, முருகன்  மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீது விபச்சார தடுப்பு மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் குற்றஞ்சாட்டி 200 பக்கங்கள் கொண்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.  

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக அருப்புகோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கில் 200 பக்கங்கள் கொண்ட 2வது மற்றும் இறுதி குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி டி.எஸ்.பி. கருப்பையா தலைமையிலான போலீசார் நீதிபதி திலகேஸ்வரியிடம் சமர்பித்தனர்.

அந்த குற்றப்பத்திரிக்கையில் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில் நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் நிர்மலாதேவியிடம் எடுக்கப்பட்ட குரல் மாதிரி சோதனை அறிக்கைகளும், செல்போன் உரையாடல் உள்ளிட்ட விசாரணை ஆவணங்களும் குற்றப்பத்திரிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது