​​ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் கமிசனுக்கு பதவிக் காலம் நீட்டிப்பு...
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் கமிசனுக்கு பதவிக் காலம் நீட்டிப்பு...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் கமிசனுக்கு பதவிக் காலம் நீட்டிப்பு...

Sep 07, 2018 10:15 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்துவதற்கு அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, கடந்த மே மாதம் 23ம் தேதி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலமையிலான ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஜூன் மாதம் 4 ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக இந்த ஆணையம் விசாரணை நடத்தியது.

சம்பவம் தொடர்பாக 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.