​​ பயிற்சி முடித்த ராணுவ வீரர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பயிற்சி முடித்த ராணுவ வீரர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள்

பயிற்சி முடித்த ராணுவ வீரர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள்

Sep 07, 2018 8:38 AM

சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாத கால பயிற்சி நிறைவு பெற்ற வீரர்கள், வியப்பூட்டும் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர்.

சென்னை - பரங்கிமலையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்ற குழுவினருக்கு நாளை பயிற்சி நிறைவு விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பயிற்சி முடித்த வீரர்களின் சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பயிற்சி மைய மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வீரர்கள் குதிரைகளின் மீது சவாரி செய்தவாறே, சிலிர்ப்பூட்டும் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர்.

குதிரை சவாரியைப் போலவே, மோட்டர் சைக்கிள்களை இயக்குவதிலும் சாகசங்களை செய்து காட்டினர். மோட்டார் சைக்கிளில் மனித பிரமிடுகள் ஏற்படுத்துவது, நெருப்பு பற்றி எரியும் வளையப் பாதையின் வழியே மோட்டார் சைக்கிளை செலுத்துவது என வீரர்கள் நிகழ்த்திய சாகசங்கள் திகைப்பூட்டின.

சாகசங்களுக்கு இணையாக தமிழ்நாட்டின் பாரம்பரிய வீரவிளையாட்டான சிலம்பாட்டம், கேரள பாரம்பரியத்தை பறைசாற்றும் களரி போன்றவைற்றையும் வீரர்கள் வெகுநேர்த்தியாக அரங்கேற்றி பார்வையாளர்களின் கரவொலிகளைப் பெற்றனர்.

இவை தவிர, பாராகிளைடிங் சாகங்களையும் வீரர்கள் செய்து காண்பித்தனர். சாசக நிகழ்ச்சிகளை ராணுவ அதிகாரிகள், வீரர்களின் குடும்பத்தினர் பார்வையிட்டனர்.