​​ கொல்கத்தாவில் 20 பாலங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன - மம்தா பானர்ஜி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொல்கத்தாவில் 20 பாலங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன - மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் 20 பாலங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன - மம்தா பானர்ஜி

Sep 07, 2018 7:56 AM

கொல்கத்தாவில் 20 பாலங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மஜேர்ஹத் பாலம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் கொல்கத்தா மற்றும் ஹவுராவில் உள்ள பழைய பாலங்களை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இரண்டு நகரங்களிலும் குறைந்தது 20 பாலங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். பொதுவாக பாலத்தின் ஆயுட்காலம் 50 ஆண்டுகள்தான் என்றும் பல பாலங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவையே என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.