​​ தமிழகத்தில் இன்று முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் இயங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் இன்று முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் இயங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் இன்று முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் இயங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

Sep 07, 2018 7:52 AM

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அமைக்கப்பட்ட 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு, பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவராணபொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவை இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து லாரிகள் மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு, லாரிகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு என்றார்.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில்,  தமிழகத்தில் நீட் தேர்வுக்குரிய பயிற்சியளிக்க தனியார் நிறுவனங்கள் பெரும் தொகையை வசூலிக்கின்றன. இதனால் மிகுந்த பின்தங்கிய வகுப்பு மற்றும் கிராமங்களைச்  சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவதால், இலவச நீட் பயிற்தியை அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி இன்று முதல் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படத் தொடங்கும் என்றும், சுமார் 3200 ஆசிரியர்கள் பயிற்சியளிக்க உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.