​​ அரசியல்வாதிகளில் மோசமானவர்கள் இருக்கலாம், அரசியல் மோசமானது அல்ல - ஃபருக் அப்துல்லா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசியல்வாதிகளில் மோசமானவர்கள் இருக்கலாம், அரசியல் மோசமானது அல்ல - ஃபருக் அப்துல்லா

அரசியல்வாதிகளில் மோசமானவர்கள் இருக்கலாம், அரசியல் மோசமானது அல்ல - ஃபருக் அப்துல்லா

Sep 07, 2018 7:09 AM

அரசியல்வாதிகளில் மோசமானவர்கள் இருக்கலாமே தவிர அரசியல் மோசமானது அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், பணம் சம்பாதிப்பதற்காகவும், சேவை செய்வதற்காகவும் நம்மில் பலர் அரசியலில் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கோவில்களிலோ, மசூதிகளிலோ, குருத்துவாரவிலோ கடவுள் இல்லை என்று தெரிவித்த ஃபருக் அப்துல்லா, மக்களிடம்தான் கடவுள் இருப்பதாக கூறினார்.

எனவே மக்களுக்கு சேவை செய்வதே கடவுளுக்கு செய்யும் சேவை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு தேர்தல்களும் மக்களை இணைப்பதற்கு பதில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.