​​ பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து செப்டம்பர் 10 இல் நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து செப்டம்பர் 10 இல் நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து செப்டம்பர் 10 இல் நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு

Sep 06, 2018 9:48 PM

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் பத்தாம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்குக் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை இதுவரை இல்லாத வகையில் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. இதனால் லாரிகளின் சரக்குக் கட்டணமும் உயர்ந்து உணவுப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் விலையும் உயர்கிறது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றைச் சரக்கு சேவை வரியின் கீழ் கொண்டுவர வேண்டும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை பாஜக அரசு ஏற்காத நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து செப்டம்பர் பத்தாம்தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதை அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.