வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
Published : Sep 06, 2018 9:42 PM
வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
Sep 06, 2018 9:42 PM
வடமேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டிஃகா ((Digha)) என்ற இடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன்காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், குளச்சல், ராமேஸ்வரம், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.