​​ இந்தியாவில் 5 ஆண்டுகளில் மின்சார வாகனத் தொழில் வலுவடையும் - Mahindra & Mahindra
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவில் 5 ஆண்டுகளில் மின்சார வாகனத் தொழில் வலுவடையும் - Mahindra & Mahindra

இந்தியாவில் 5 ஆண்டுகளில் மின்சார வாகனத் தொழில் வலுவடையும் - Mahindra & Mahindra

Sep 06, 2018 9:22 PM

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனத் தொழில் வலுவடையும் என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்க ஆண்டு மாநாட்டுக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா ((Pawan Goenka)) பாட்டரி விலைகள் குறைவதால் ஏற்கனவே மின்சார வாகனங்களின் விலை கணிசமாகக் குறைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் குறையும் என்றும் அந்த வகை வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். மின்சார வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து உற்பத்தியும் அதிகரிக்கும் என்பதால் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் மானியத்துக்கு அவசியம் இருக்காது என்றும் தெரிவித்தார்.