​​ உத்தரப்பிரதேசத்தில் பாலத்தின் கீழ் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளிப் பேருந்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உத்தரப்பிரதேசத்தில் பாலத்தின் கீழ் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளிப் பேருந்து

Published : Sep 06, 2018 9:19 PM

உத்தரப்பிரதேசத்தில் பாலத்தின் கீழ் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளிப் பேருந்து

Sep 06, 2018 9:19 PM

உத்தரப்பிரதேசத்தில் பாலத்தின் கீழ் தேங்கிய நீரில் உள்ள பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட பள்ளிக் குழந்தைகள் மீட்கப்படும் காட்சிகள் வெளியாகியுள்ன.

ராம்நகாரியா என்ற இடத்தில், ரயில்வே பாலத்துக்கு கீழ் 4 நாட்களுக்கு முன் பெய்த மழை நீர் தேங்கியிருந்தது. அது அவ்வளவு ஆழம் இருக்காது என தவறாகக் கணித்த பள்ளிப் பேருந்தின் ஓட்டுநர் அதில் சென்றுவிடலாம் என வாகனத்தை இயக்கினார்.

ஆனால், ஜன்னல் வரை தேங்கிய நீரால் பள்ளிக் குழந்தைகள் அலறத் தொடங்கின. 4 நாட்களாகத் தேங்கியே இருந்த நீரில் சேறும் மண்டிக் கிடந்தால் வாகனத்தை மேற்கொண்டு நகர்த்த முடியாமல் போனது. இதையடுத்து பொதுமக்கள் உதவியோடு ஒவ்வொரு குழந்தையாக போலீசார் மீட்டனர்.