​​ பிரிட்டிஷ் ஏர்வேஸ் - விஸ்தாரா விமான சேவை நிறுவனங்கள் பயணிகளை பகிர்ந்துகொள்ள ஒப்பந்தம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரிட்டிஷ் ஏர்வேஸ் - விஸ்தாரா விமான சேவை நிறுவனங்கள் பயணிகளை பகிர்ந்துகொள்ள ஒப்பந்தம்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் - விஸ்தாரா விமான சேவை நிறுவனங்கள் பயணிகளை பகிர்ந்துகொள்ள ஒப்பந்தம்

Sep 06, 2018 9:16 PM

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் இந்தியாவின் விஸ்தாரா நிறுவனமும் பயணிகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஒப்பந்தமிட்டுள்ளன.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவைகளை இயக்கி வருகிறது. விஸ்தாரா நிறுவனம் இந்த 5 நகரங்களுடன் அகமதாபாத், அமிர்தசரஸ், புவனேஸ்வர், சண்டிகர், கோவா, கொல்கத்தா, கொச்சி, புனே உள்ளிட்ட நகரங்களுக்கு சேவைகளை செயல்படுத்தி வருகிறது.

இந்த இரண்டு நிறுவனங்களும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் பயணிகள் சிரமமின்றி இந்தியாவின் 13 நகரங்களுக்கு பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ba.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரும் 27-ஆம் தேதி முதல் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.