​​ ஒருபாலினச் சேர்க்கை குற்றமில்லை... ஆனால், ஒருபாலினத் திருமணம் இயற்கைக்கு முரணானது என்றும் கருத்து - RSS பிரமுகர் கருத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒருபாலினச் சேர்க்கை குற்றமில்லை... ஆனால், ஒருபாலினத் திருமணம் இயற்கைக்கு முரணானது என்றும் கருத்து - RSS பிரமுகர் கருத்து

ஒருபாலினச் சேர்க்கை குற்றமில்லை... ஆனால், ஒருபாலினத் திருமணம் இயற்கைக்கு முரணானது என்றும் கருத்து - RSS பிரமுகர் கருத்து

Sep 06, 2018 9:06 PM

ஒருபாலினச் சேர்க்கை குற்றமில்லை ஆனால் ஒருபாலினத் திருமணம் இயற்கைக்கு மாறானது என ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

ஒருபாலினச் சேர்க்கை குற்றமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து டெல்லியில் ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் அருண்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, ஒருபாலினச் சேர்க்கையைக் குற்றம் எனக் கருத வேண்டியதில்லை எனக் குறிப்பிட்டார்.

அதேநேரத்தில் ஒருபாலினத்தவர் திருமணம் இயற்கைக்கு முரணானது என்றும், அவ்வகை உறவைத் தாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியச் சமூகத்தில் பாரம்பரியமாகவே ஒருபாலினத்தவர் திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் அருண்குமார் குறிப்பிட்டார்.