​​ வால்பாறையைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு எலிக்காய்ச்சல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வால்பாறையைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு எலிக்காய்ச்சல்

Published : Sep 06, 2018 8:57 PM

வால்பாறையைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு எலிக்காய்ச்சல்

Sep 06, 2018 8:57 PM

கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருக்கிறார். கேரளாவில் பெருமழை வெள்ளத்திற்கு பின், எலிக்காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது.

இந்நிலையில், வால்பாறையைச் சேர்ந்த முதியவர் கடுமையான காய்ச்சலுடன், கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழ்நாட்டில், எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபராக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக பேசிய கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், அந்த முதியவருக்கு எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் பாக்டீரிய தாக்கல் இருந்தாலும், அதை மட்டுமே வைத்து உறுதிப்படுத்த முடியாது என்றார்.