​​ முழு நேர அரசியலில் தாம் இன்னும் களம் இறங்கவில்லை - ரஜினிகாந்த்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முழு நேர அரசியலில் தாம் இன்னும் களம் இறங்கவில்லை - ரஜினிகாந்த்

முழு நேர அரசியலில் தாம் இன்னும் களம் இறங்கவில்லை - ரஜினிகாந்த்

Mar 13, 2018 9:29 PM

முழுநேர அரசியல்வாதியாக தாம் இதுவரை களமிறங்கவில்லை என்றும், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு அதனாலேயே பதிலளிக்கவில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ரஜினி, தற்போது இமயமலைக்கு ஆன்மீகப் பயணமாக புறப்பட்டு சென்றுள்ளார். தர்மசாலாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த அவர், தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றிருந்தார்.

விமானநிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், அரசியல் பயணத்திற்கும், வழிபாட்டு பயணத்திற்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார். டேராடூனில்  செய்தியாளர்களை மீண்டும் சந்தித்த போது, முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக பேச மறுப்பதாக கமல்ஹாசன் முன்வைத்துள்ள விமர்சனம் குறித்து  ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், தாம் இதுவரை முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கவில்லை என்றும், அதனாலேயே அது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என்றும் கூறினார்.