​​ நிஸான் நிறுவனம், இந்தியாவில்1500 பேரை பணியமர்த்தத் திட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிஸான் நிறுவனம், இந்தியாவில்1500 பேரை பணியமர்த்தத் திட்டம்

நிஸான் நிறுவனம், இந்தியாவில்1500 பேரை பணியமர்த்தத் திட்டம்

Sep 06, 2018 8:54 PM

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான், இந்தியாவில் 1500 பேரை பணியமர்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. நிஸான் நிறுவனம் 2019-ல் இந்தியாவில் புதிய வகை சொகுசுக் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதற்கான ஆய்வு மற்றும் மேம்ப்பாட்டுப் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சென்னை அருகே உள்ள அந்த நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தில் ஏற்கனவே 7 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாள சங்க ஆண்டு மாநாட்டுக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய நிஸான் நிறுவனத்தின் இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகள் பிரிவு தலைவரான பேமென் கார்கர் (Payman Kargar) ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக மேலும் ஆயிரம் பேரும் டிஜிட்டல் மையப் பணிகளுக்காக 500 பேரும் இந்தியாவில் இருந்து பணியமர்த்தப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.