​​ பாகிஸ்தான் உலகின் 5ஆவது பெரிய அணுஆயுத நாடாக மாறும் அபாயம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தான் உலகின் 5ஆவது பெரிய அணுஆயுத நாடாக மாறும் அபாயம்

பாகிஸ்தான் உலகின் 5ஆவது பெரிய அணுஆயுத நாடாக மாறும் அபாயம்

Sep 06, 2018 7:50 PM

பாகிஸ்தான் உலகின் 5ஆவது பெரிய அணுஆயுத நாடாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க வல்லுநர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தானிடம் 60 முதல் 80 அணுஆயுதங்கள் வரையே இருக்கும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை நுண்ணறிவு முகமை 1999ஆம் ஆண்டில் கூறியிருந்தது. ஆனால் அதையும் தாண்டி பாகிஸ்தானின் அணுஆயுத வலிமை அதிகரித்துள்ளதாக, "பாகிஸ்தானின் அணுஆயுத வலிமை" என்ற அறிக்கையில், அத்துறை சார்ந்த அமெரிக்க வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிடம் தற்போது 140 முதல் 150 அணுஆயுதங்கள் இருப்பதாகவும், தற்போதைய நிலை நீடித்தால், 2025ஆம் ஆண்டுக்குள் இது 250 வரை உயரும் எனவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.