​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கையில் அரசுக்கு எதிராக ராஜபக்சே பேரணி

Published : Sep 06, 2018 6:57 PM

இலங்கையில் அரசுக்கு எதிராக ராஜபக்சே பேரணி

Sep 06, 2018 6:57 PM

இலங்கையில் சிறிசேனா அரசு பதவி விலகக் கோரி ராஜபக்சே நடத்திய பேரணியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

அந்நாட்டின் முன்னாள் அதிபரான மகிந்தா ராஜபக்சே, சிறிசேனா தலைமையிலான அரசு, மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டதாக குற்றம் சாட்டி, தமது ஆதரவாளர்களுடன் கொழும்பு நகரில் பேரணி நடத்தினார். இதற்காக இலங்கை முழுவதும் இருந்து ஏராளமானவர்களை பேருந்துகளில் கொழும்பு நகருக்கு அழைத்து வந்திருந்தனர்.

கொழும்பின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற பேரணியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பின்னர் பேசிய ராஜபக்சே, இலங்கையில் ஆட்சி மாற்றம் விரைவில் நிகழும் என்றார். ஜனபலய கொலம்பட்ட” என்ற பெயரில் நடைபெற்ற போராட்டத்திற்காக ஆட்களை ஏற்றி வந்த பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் கொழும்பு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.