​​ சமூக வலைதளங்கள் மூலம் தேர்தலில் வெளிநாடுகளின் ஆதிக்கங்களைத் தடுப்பது குறித்து அமெரிக்க செனட் புலனாய்வுக் குழு விசாரணை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சமூக வலைதளங்கள் மூலம் தேர்தலில் வெளிநாடுகளின் ஆதிக்கங்களைத் தடுப்பது குறித்து அமெரிக்க செனட் புலனாய்வுக் குழு விசாரணை

சமூக வலைதளங்கள் மூலம் தேர்தலில் வெளிநாடுகளின் ஆதிக்கங்களைத் தடுப்பது குறித்து அமெரிக்க செனட் புலனாய்வுக் குழு விசாரணை

Sep 06, 2018 6:54 PM

சமூக வலைதளங்கள் மூலம் தேர்தலில் வெளிநாடுகளின் ஆதிக்கங்களைத் தடுத்தல் குறித்து அமெரிக்க செனட் புலனாய்வுக் குழுவிடம் ஆஜராகி ஃபேஸ்புக், டிவிட்டர் தலைமைச் செயலதிகாரிகள் விளக்கமளித்தனர்.

அமெரிக்கத் தேர்தலில் சமூக வலைதளங்கள் மூலம் ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகள் தலையீடு இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலிக்கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் நடப்பாண்டு இடைப் பருவத் தேர்தல் நடைபெறும் நிலையில், அமெரிக்க செனட் புலனாய்வுக் குழுவிடம் டிவிட்டரின் தலைமைச் செயலதிகாரி ஜேக் டோர்சே ஆஜரானார்.

இதேபோல், ஃபேஸ்புக்கின் இரண்டாம் நிலை தலைமைச் செயலதிகாரி ஷெரில் சேண்ட்பர்க் ஆஜரானார். அயல்நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதைத் தவிர்க்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இரு தரப்பும் விளக்கம் அளித்தனர். இதில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் தனது பிரதிநிதியை அனுப்பாததற்கு ஆணவம் என புலனாய்வுக்குழு விமர்சித்துள்ளது.