​​ பெங்காலி தொலைக்காட்சித் தொடர் நடிகை பாயல் சக்ரவர்த்தி மர்மமான முறையில் மரணம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெங்காலி தொலைக்காட்சித் தொடர் நடிகை பாயல் சக்ரவர்த்தி மர்மமான முறையில் மரணம்

பெங்காலி தொலைக்காட்சித் தொடர் நடிகை பாயல் சக்ரவர்த்தி மர்மமான முறையில் மரணம்

Sep 06, 2018 6:23 PM

பெங்காலி தொலைக்காட்சித் தொடர் நடிகை பாயல் சக்ரவர்த்தி சிலிகுரியில் உள்ள ஓட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

பல்வேறு தொலைக்காட்சி நாடகத் தொடர் மற்றும் திரைப்படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்த பாயல் சக்ரவர்த்தி எனும் நடிகைக்கு சமீபத்தில் விவாகரத்தானது. அவருக்கு ஒரு மகன் உள்ளார். செவ்வாய் அன்று மாலை மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கினார். புதன் கிழமை காலை அவர் புறப்பட வேண்டியநிலையில், நீண்ட நேரம் கதவைத் தட்டியும் அவர் பதிலளிக்காததால் போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

போலீசார் உதவியோடு அறைக்குள் சென்று பார்த்தபோது, அவர் சடலமாகக் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.