​​ உதவி செய்திருந்தால் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருக்கலாம் - அர்விந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் டெல்லி அரசை சாடிய வீராங்கனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதவி செய்திருந்தால் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருக்கலாம் - அர்விந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் டெல்லி அரசை சாடிய வீராங்கனை

Published : Sep 06, 2018 6:22 PM

உதவி செய்திருந்தால் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருக்கலாம் - அர்விந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் டெல்லி அரசை சாடிய வீராங்கனை

Sep 06, 2018 6:22 PM

அரசு உதவிக்கரம் நீட்டியிருந்தால் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று இருக்க முடியும் என மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரான், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையிலேயே ஆதங்கத்தை வெளிப்படுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற டெல்லி வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் கெஜ்ரிவால் முன்னிலையில் பேசிய மல்யுத்த வீராங்கனை திவ்யா, அரசிடம் இருந்தும், ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து உறுதி அளித்தபடி உதவி வந்து சேரவில்லை என்று குற்றம்சாட்டினார்.

தம்முடைய செல்போன் அழைப்பைக் கூட அதிகாரிகள் ஏற்கவில்லை என்று கூறிய திவ்யா கக்ரான், உதவி கிடைத்திருந்தால் தாம் வெண்கலத்திற்குப் பதில் தங்கம் வென்றிருக்கக் கூடும் என்று கூறினார். முதலமைச்சர் முன்னிலையிலேயே அரசை குறை கூறி வீராங்கனை பேசியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.