​​ அரசு வழக்குகளின் நிலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் - கீழ் நிலை அதிகாரிகளுக்கு உள்துறை செயலர் உத்தரவிட நீதிமன்றம் உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு வழக்குகளின் நிலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் - கீழ் நிலை அதிகாரிகளுக்கு உள்துறை செயலர் உத்தரவிட நீதிமன்றம் உத்தரவு

Published : Sep 06, 2018 6:16 PM

அரசு வழக்குகளின் நிலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் - கீழ் நிலை அதிகாரிகளுக்கு உள்துறை செயலர் உத்தரவிட நீதிமன்றம் உத்தரவு

Sep 06, 2018 6:16 PM

அரசு வழக்குகளின் நிலையை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க கீழ் நிலை அதிகாரிகளுக்கு உள்துறை செயலர் உத்தரவிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

2016-ல் வழக்கு ஒன்றில் உள்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் வரும் 27-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் உள்துறை செயலருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

அரசு வழக்குகளின் நிலை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க கீழ் நிலை அதிகாரிகளுக்கு உள்துறை செயலர் உத்தரவிட உத்தரவிட்ட நீதிபதி, இதற்கென ஒவ்வொரு துறையிலும் தனி இணையதளம் அல்லது மின்னஞ்சலை உருவாக்கவும், வழக்கு விவரங்களை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட்டார்.