​​ உயிருடன் பாம்பைக் கவ்வியபடி நடமாடிய பூனை..! மக்கள் பீதி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயிருடன் பாம்பைக் கவ்வியபடி நடமாடிய பூனை..! மக்கள் பீதி

Published : Sep 06, 2018 6:11 PM

உயிருடன் பாம்பைக் கவ்வியபடி நடமாடிய பூனை..! மக்கள் பீதி

Sep 06, 2018 6:11 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உயிருடன் இருந்த பாம்பை கவ்வியபடி சுற்றித் திரிந்த பூனையால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் உள்ள கோபால்டு லைன் 2 வது வீதியில் ஒரு வீடு பயன்படுத்தப்படாமல் பூட்டிக்கிடந்தது. இந்த வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைய முயன்றது. அப்போது அங்கிருந்த பூனை, பாம்புடன் சண்டையிட்டது. பின்னர் பாம்பை சரணடைய வைத்த பூனை வாயில் கவ்வியபடி அங்கும், இங்கும் உலவித் திரிந்தது. ஓடுகளால் வேயப்பட்ட வீடுகளின் மேற்கூரை வழியாக பாம்பைக் கொண்டு சென்ற பூனை, இறுதியாக ஒரு வீட்டிற்குள் நுழைந்தது.