​​ சிவகங்கை டி.புதுக்கோட்டையில் வைகையாற்றில் மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவகங்கை டி.புதுக்கோட்டையில் வைகையாற்றில் மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சிவகங்கை டி.புதுக்கோட்டையில் வைகையாற்றில் மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Sep 06, 2018 6:09 PM

சிவகங்கை மாவட்டம் டி.புதுக்கோட்டையில் வைகையாற்றில் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே மணல் அள்ளப்பட்டதால் பார்த்திபனூர் மதகு அணை மற்றும் கீழப்பெருங்கரை தடுப்பு அணை பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய், ராமநாதபுரம், முதுகுளத்தூருக்கு தண்ணீர் செல்லும் கல்வாய்களும் பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் மணல் குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கீழ் நிலை அதிகாரிகளின் அறிக்கையை நம்பி, கள ஆய்வு செய்யாமல் மணல் குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிபதிகள் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.