​​ சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் 17 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் 17 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்பு

சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் 17 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்பு

Mar 13, 2018 9:13 PM

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் நாடு முழுவதிலுமிருந்து 17 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், ஜித்தன் ராம் மாஞ்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சோனியா காந்தி நேரடி அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் சுமார் 3 மாதங்களுக்குப் பின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து சந்திப்பு நடத்துவதன் மூலம் அரசியலில் தனது தீவிர செயல்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.