​​ BSC நர்சிங், B Pharm உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் - மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
BSC நர்சிங், B Pharm உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் - மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

BSC நர்சிங், B Pharm உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் - மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

Sep 06, 2018 6:07 PM

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என, தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் அலுவலக வேலைநாட்களில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. விண்ணப்பத்தின் விலை 400 ரூபாய் என்றும், வருகிற திங்கட்கிழமை தொடங்கி, 19ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 20ஆம் தேதியாகும் எனக் கூறப்பட்டிருக்கிறது. மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.tnhealth.org அல்லது www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் மூலம் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்திருக்கிறது.