​​ சென்னை விமான நிலையத்தில் நேற்று முன் தினம் நடைபெற இருந்த விபத்து தவிர்ப்பு - அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை விமான நிலையத்தில் நேற்று முன் தினம் நடைபெற இருந்த விபத்து தவிர்ப்பு - அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை

Published : Sep 06, 2018 6:03 PM

சென்னை விமான நிலையத்தில் நேற்று முன் தினம் நடைபெற இருந்த விபத்து தவிர்ப்பு - அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை

Sep 06, 2018 6:03 PM

சென்னை விமான நிலையத்தில் நேற்று முன் தினம் நடைபெற இருந்த விமான விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் உள்ள ஓடுதளத்தில் கொழும்புவில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியது. மற்றொரு ஓடுதளம் பராமரிப்புப் பணியால் மூடப்பட்டதால், அதே ஓடுதளத்தில் மும்பையில் இருந்து வந்த மற்றொரு விமானமும் தரையிறங்க கட்டுப்பாட்டு அறை சார்பில் அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஓடுதளத்தில் விமானங்களுக்கு சரக்கு ஏற்ற வந்த லோடு ஆட்டோ  புகுந்ததாக சொல்லப்படுகிறது.

இதைக் கண்டறிந்து உரிய நேரத்தில் சுதாரித்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக மும்பையில் இருந்து வந்த விமானத்தை தற்போது தரையிறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.  ஓடுதளத்தில் புகுந்த லோடு ஆட்டோ  அகற்றப்பட்டதை அடுத்து மும்பையில் இருந்த வந்த விமானம் தரையிறககப்பட்டது. இதுகுறித்து, இந்திய விமாள நிலையங்கள் ஆணையத்தின் அதிகாரிகள் டெல்லியில் இருந்து வந்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.