​​ அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை

Published : Sep 06, 2018 6:00 PM

அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை

Sep 06, 2018 6:00 PM

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பலருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் செப்டம்பர் 7ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது. அப்போலோ தலைமை பிசியோ தெரபிஸ்ட் ராஜ் பிரசன்னா, ஆட்சிப்பணி அதிகாரி ஆகியோர் செப்டம்பர் பத்தாம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுநரின் செயலரும், இப்போது தமிழகத் தொழில்வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான ரமேஷ்சந்த் மீனா, அப்போலோ மருத்துவமனை இதயநோய் வல்லுநர் சாய் சதீஸ், மருத்துவர்கள் விக்னேஷ், ரவி வர்மா ஆகியோர் செப்டம்பர் 11ஆம் நாள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை நுரையீரல் வல்லுநர் பாபு ஆபிரகாம், மதிவாணன் ஆகியோர் செப்டம்பர் 12ஆம் நாள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.