​​ கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

Published : Sep 06, 2018 10:08 AM

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

Sep 06, 2018 10:08 AM

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. மஜெர்ஹெட் மேம்பாலத்தின் ஒருபகுதி செவ்வாய்கிழமை மாலை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்தன.

இதையடுத்து இடிபாடுகளுக்கு இடையில் மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பாலம் இடிந்து விழுந்த இடத்தை மம்தா பானர்ஜி பார்வையிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.