​​ அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கின்றனர்:செங்கோட்டையன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கின்றனர்:செங்கோட்டையன்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கின்றனர்:செங்கோட்டையன்

Sep 06, 2018 9:59 AM

கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை, விடுமுறையின் போது, அருகில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் செல்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சியைத் அவர் திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், 3 ஆயிரத்து 200 ஆசிரியர்களைக் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், நாளை முதல் செயல்படத்தொடங்கும் எனவும், மாணவர்களுக்கு தினசரி 3 மணி நேரப் பயிற்சி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.