​​ உலகிலேயே 5வது மிகப்பெரிய வைரம் ரூ. 260 கோடிக்கு ஏலம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகிலேயே 5வது மிகப்பெரிய வைரம் ரூ. 260 கோடிக்கு ஏலம்

உலகிலேயே 5வது மிகப்பெரிய வைரம் ரூ. 260 கோடிக்கு ஏலம்

Mar 13, 2018 8:54 PM

உலகில் ஐந்தாவது மிகப்பெரிய வைரம் சுமார் 260 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில் வைரக்கல்லை ஜெம் டைமண்ட்ஸ் என்ற நிறுவனம் கண்டெடுத்தது. 910 கேரட் மதிப்புள்ள இந்த வைரத்திற்கு Lesotho Legend என்று பெயரிடப்பட்டது. 2 கோல்ப் பந்துகளின் அளவுடைய வைரமானது, பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் ((Antwerp)) நகரில் ஏலம் விடப்பட்டது. இந்திய மதிப்பில் 260 கோடி ரூபாய்க்கு இந்த வைரத்தை ஒருவர் தனதாக்கினார்.